Header Ads



முஸ்லிம்களுக்கெதிராக பாரிய இனவாத சூழ்ச்சி - அமைச்சர் கஜதீர எச்சரிக்கை

இஸ்லாத்துக்கு எதிராக சிங்களத்தில் 8 இணையதளங்களும் ஆங்கிலத்தில் 10 இணையதளங்களும் இயங்குவதாகவும் (அல்)குர்ஆனுக்கு எதிராகவும் முஹம்மது நபிக்கு (ஸல்) அவர்களுக்கு எதிராகவும் இவை உள்ளது என்று புனர்வாழ்வு சிறைச்சாலைகள மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் மேலும் உரையாற்றியுள்ள அவர் கூறியிருப்பதாவது, இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக புதியதொரு பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கின்றார்கள் இதன் பின்னணியில் ஆயுத வியாபாரிகள் இருகின்றார்கள் அவர்களுக்கு பயங்கரவாதம் வேண்டும்  அரசாங்கம் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி காணும்போது இவற்றில் தலையிடுவவதற்காக மேற்குலகச் சக்திகள் இன்று பல வழிகளில் பயங்கரவாதத்தை வளர்க்க முயற்சிகின்றார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான பிரசாரங்கள் திட்டமிட்ட வகையில் செய்யப்பட்டு வருகின்றது பல இணையத்தளங்கள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் இது தொடர்பான பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பல இணையதளங்கள் இயங்குவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்ககாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக லதீப் பாரூக் எழுதிய கட்டுரையும் ஆங்கிலத்தில் வெளியாகியது. அதில் 18 இணையதளங்கள் இயங்குவதாக தெரிவிக்கபட்டுள்ளது . கடந்த ஜூன் மாதம் ஏ. ஜி.ஏ பாரி என்பவரும் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு முஸ்லிம்களுக்கும் எதிரான இணையத்தளம் தொடர்பில் முறைப்பாடு ஒன்றை வழகிருந்தார்.

அதேவேளை அனுராதபுரத்தில் முஸ்லிம் செய்தியாளர் ஒருவரை தொடர்புகொண்ட ஆசிரியர் ஒருவர் அங்கு சிங்களத்தில் துண்டு பிரசுரங்கள் வெளியாகியுள்ளதகவும் அதில் முஸ்லிம்களை மோசமாக வர்ணித்து இனப் பெருக்கத்தின் மூலம் பௌத்தர்களின் நிலங்களை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதாகவும் மேலும் அது முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பௌத்தர்களை தூண்டிவிடும் வசங்களை கொண்டுள்ளதாகவும் ஆனால் அந்த துண்டு பிரசுரம் யாரால் வெளியிடப்பட்டுள்ளது என்ற விபரம் அதில் குறிப்பிடப்படவிலை என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.