இலங்கையிலிருந்து ஹஜ் கடமைக்கு செல்ல 3,800 பேருக்கே அனுமதி
இலங்கையிலிருந்து இவ்வருடம் ஹஜ் பயணம் மேற்கொள்ள 3800 போருக்கு மாத்திரமே வாய்ப்பு கிட்டியுள்ளது. ஹஜ் கோட்டா குறைவாக கிடைத்துள்ளமையால் முதல் தடவையாக ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிப்பவர்களுக்கே முதலிடம் கொடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பௌஸி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான விளக்கம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஹஜ் முகவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முஸ்லிம் சனத்தொகைக்கேற்பவே ஹஜ் கோட்டா வழங்கப்படுவதாகவும், இதனடிப்படையில் 2800 பேருக்கே ஹஜ் கோட்டா வழங்கப்பட்டதாகவும், இருப்பினும் தனது முயற்சியின் பயனாக தற்போது 3800 பேருக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பௌஸி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment