தந்தைக்காக போராடி உயிர்விட்ட மகள்
அமெரிக்க தாக்குதல் நடத்திய போது அவரை கொல்ல விடாமல் ஒரு பெண் கேடயமாக நின்றார். அவர் அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தினார். இதனால் அமெரிக்க படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த பெண் கொல்லப்பட்டார். அவர் கேடயமாக நின்றதால் பின்லேடனை அமெரிக்க படைகளால் உயிரோடு பிடிக்க முடியவில்லை. பின்லேடனை சுட்டுக் கொன்றனர்.
பின்லேடனுக்கு கேடயமாக நின்ற அந்த பெண் பின்லேடனின் மனைவியாக இருக்கலாம் என கருதுபதாக அமெரிக்கா கூறியது. ஆனால் மனைவி அல்ல பின்லேடனின் மகள் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
இந்த தகவலை பாகிஸ்தான் உளவுப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். பின்லேடனுடன் அவருடைய ஒரு மனைவியும் 8 குழந்தைகளும் இருந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரையும் தற்போது பாகிஸ்தான் ராணுவத்தினர் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். பின்லேடனுடன் சுட்டுக் கொல்லப்பட்ட மகள் வேறு ஒரு மனைவியின் மகளாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

Post a Comment