Header Ads



யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்ற தப்லிக் ஜமாத் இஜ்திமா

யாழ்ப்பாணத்தில் தப்லிக் ஜமாத் இஜ்திமா யாழ் பெரியபள்ளியில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பலபிரதேசங்களில் இருந்தும் வருகை தந்துள்ள தப்லிக் ஜமாத் முக்கியஸ்தர்கள் 1500 க்கும் மேற்பட்டவர்கள் இந்த இஜ்திமாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இஜ்திமாவில் ஜமாத் பொறுப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் லெப்பை ஹாஜியார், ஸல்மான் மௌலவி, மற்றும் றிஸ்வி முப்தி ஆகியோரும் உரையாற்றியுள்ளனர்.

முஸ்லிம்கள் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் புலிகளினால் இனச் சுத்திகரிப்புக்குள்ளான பின்னர் யாழ்ப்பாணத்தில் தப்லிக் ஜமாத் நடத்திய முதலாவது இஜ்திமா இதுவென்பது குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை யாழ்ப்பாணத்தில் தப்லிக் ஜமாத்தின் பணிகளை யாழ் முன்னால் அமீர்களில் ஒருவரான காலம்சென்ற எம்.பி.எம். ஸாபி சிறந்த முறையில் முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.