புலிகள் எம்மை துரத்தியபோது ஐ.நா. மௌனம் காத்தது ஏன் - யாழ் முஸ்லிம்கள் கேள்வி
யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த சர்வ மதத்தலைவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உட்பட பல பொது அமைப்புகளையும், முஸ்லிம் சமூகத்தையும் சந்தித்து உரையாடியுள்ளனர்.
சர்வமதக்குழு யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தை யாழ்.முஸ்லிம் வட்டாரம் 4 ஆம் குறுக்குத் தெருவில் சந்தித்து உரையாடினர். இந்நிகழ்வுக்கு யாழ்.மாநகரசபை உறுப்பினர் மௌலவி எஸ்.சுபியான் தலைமைதாங்கினார்.
இம்மக்களிடம் சர்வமதத்தலைவர்கள், இலங்கைக்கெதிராக ஐ.நா. சமர்ப்பித்துள்ள போர்க்குற்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது; "ஜனாதிபதி எந்தவொரு நாட்டினது இராணுவத்தை அழைக்காமல் நமது நாட்டு படையினரின் தீரத்தினால், நாட்டில் பயங்கரவாதம் முற்றுமுழுதாக அகற்றப்பட்டது. அதனால் தான் நாம் எமது மண்ணில் குடியிருக்கிறோம். எம்மை பயங்கரவாதிகள் உடுத்த துணியுடன் விரட்டியபோது மௌனித்திருந்த ஐ.நா. இன்று இலங்கை ஜனாதிபதி மீது போர்க்குற்றம் சுமத்துவது திட்டமிட்ட அநியாய செயலாகும். எங்கள் பிரச்சினையை நாங்கள் தீர்ப்போம், யாரும் இதில் தலையிடக்கூடாது எனத் தெரிவித்தனர்.

Post a Comment