ஒஸாமாவின் ஜனாஸா அமெரிக்க பாதுகாப்பில் உள்ளது - இலங்கை பிரதமர் கண்டுபிடிப்பு
பாகிஸ்தானில் அமெரிக்கப் படைகளுடனான மோதலில் ஒஸ்மா பின்லேடன் மரணித்தமையானது சர்வதேசச் சட்டங்களை மீறவில்லையென பிரதமர் டி.எம். ஜயரட்ண கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று செவ்வாய்கிழமை புறக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியுள்ள பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கட்டளையொன்றை வைத்திருக்கிறோம் என்ற சாட்டில் வேற்று நாடொன்று இறைமையுள்ள ஒரு நாட்டினுள் புகுந்து ஒருவரை கொல்ல முடியுமா? பிரபாகரனை கொல்லுமாறு நாங்கள் ஒருபோதும் உத்தரவிடவில்லை. யுத்தம் நடைபெற்ற வேளையில் அவர் கொல்லப்பட்டார். இது இந்த மரணங்களுக்கிடையிலான வித்தியாசம்.
ஒஸாமா பின்லேடனின் சடலம் அவர்களுடைய பாதுகாப்பிலேயே உள்ளது என்றார். இங்கு பிரதமர் ஜயரட்ண அவர் அவர்களுடைய பாதுகாப்பிலேயே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளமை அமெரிக்காவை குறித்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment