உலகவங்கி, இந்தியா நிதியுதவியில் யாழில் வீடுகள் - முஸ்லிம்களும் நன்மையடைவார்களா?
உலக வங்கியின் நிதியுதவியுடன் 6 ஆயிரத்து 258 நிரந்தர வீடுகள் அமைக்கவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக் கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
போரின் பின் யாழ்.குடாநாட்டில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்ததே. இராணுவத்தினரின் கட்டுப்பாட் டில் முன்பு இருந்த பல பகுதிகளில் தற்போது மக்கள் மீள்குடியேறி வருகின்றமையால் உயர் பாதுகாப்பு வலயங்கள் என அழைக்கப்பட்ட பல பகுதிகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டுவிட்டன.எஞ்சியுள்ள பகுதிகளில் மிதிவெடி அகற்றப்பட்டதும் மக்கள் மீள்குடி யேற்றப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு முக்கிய தேவையாக வீடுகள் உள்ளன. அவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டியது அவசியமாகவுள்ளது. இதற்கென உலகவங்கி, இந்தியா, அரசசார்பற்ற நிறுவனங்கள் நிதியுதவி வழங்குவதோடு மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு வீடுகளை அமைத்து தரவும் அவை முன்வந்துள்ளன. உலக வங்கி 6ஆயிரத்துக்கு மேற்பட்ட நிரந்தர வீடுகளை அமைத்து தரவுள்ளதோடு, போரினால் பாதிக் கப்பட்ட பல வீடுகளை புனரமைத்தும் தருவதாக உறுதியளித்துள்ளது.
இந்தியா தனது வீட் டுத்திட்டத்தின் கீழ் 5ஆயிரத்து 250 வீடுகளை அமைத்துத் தருவதாகவும், அரச சார்பற்ற நிறுவனங்களான நேப் 2 ஆயிரத்து 377 வீடுக ளையும், கரிதாஸ் கியூடெக் 247,’போரூட் 9 வீடுகளையும், முஸ்லிம் பவுண்டேசன் 10 வீடுகளையும் அமைத்துத் தரவுள்ளன. வேறு பல நிறுவனங்களும் வீடுகளை அமைத்து தருவதாகவும் அதற்கான திட்டங்களை சமர்ப்பித்துள்ளன. இந்த வீடுகள் போரினால் அதிகள வில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment