ஐ.நா. வுக்கு இலங்கை பதிலளிக்கும் - பேராசிரியர் பீரிஸ் தெரிவிப்பு
ஐக்கிய நாடுகள் சபை இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்கத் தயார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்குப் பகுதியில் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்திற்கு தெளிவுபடுத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் சற்றுமுன்னர் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுத்துமூலம் தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்றையதினம் ஐ.நா சபை ஊடகவியலாளர் மாநாட்டின் போது இலங்கை எதுவித உத்தியோகபூர்வ பதிலும் அளிக்கவில்லை எனவும் சாட்சியங்களுடன் இலங்கை பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment