அமெரிக்காவிடம் பிடிபடாதிருக்க ஒஸாமாவின் பாதுகாவலரே ஒஸாமாவை சுட்டார்
ஒசாமா பின்லாடன் அமெரிக்காவிடம் பிடிபடாதிருக்க ஒஸாமாவின் பாதுகாவலரே ஒஸாமாவை சுட்டார் என பாகிஸ்தானில் இருந்து வெளிவரும், "டான்' பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டான்' பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பின்லாடன் உடல், அமெரிக்க வீரர்களால் எடுத்துச் செல்லப்பட்ட பின், அந்த வீட்டுக்குச் சென்று சோதனையிட்ட அதிகாரி ஒருவர், இது குறித்து கூறுகையில், "அவர் அருகில் இருந்து சுடப்பட்டு செத்தவராகத் தெரியவில்லை. அவரது பாதுகாப்பு வீரர் ஒருவரால் சுடப்பட்டிருக்கலாம். அமெரிக்காவின் கையில், அவர் சிக்காமல் இருப்பதற்காக, இப்படி செய்திருக்கலாம்' என தெரிவித்தார்.இவ்வாறு, "டான்' பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
எனினும் ஒசாமா பின்லாடனுடன், அமெரிக்க வீரர்கள், 40 நிமிடங்கள் துப்பாக்கிச் சண்டை நடத்தினர் என்றும், அப்போது, அவரது தலையில், ஒன்று அல்லது இரண்டு குண்டுகள் பாய்ந்து அவர் இறந்து போனார் என்றும், அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment