Header Ads



எச்சரிக்கை...!!! ஒஸாமா பெயரில் வைரஸ்

"ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட பின், சைபர் கிரிமினல்கள் எனப்படும், இணையதளத் திருடர்கள், பல்வேறு வழிகளில் இணையதளங்கள் மற்றும் தனி நபர் கணினிகளுக்குள் புகுந்து, "வைரசை'ப் பரப்பி வருகின்றனர். இதனானல், கணினிப் பயன்படுத்துவோர் கவனத்துடன் இருக்க வேண்டும்' என, நிபுணர்கள் எச்சரித்துள்ளர்.

பாகிஸ்தானின் அபோதாபாத்தில், ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்த 12 மணி நேரத்துக்குள், உலகம் முழுவதும் உள்ள கணினிகளில் பல்வேறு விதமான, "வைரஸ்'கள் பரவுவதை நிபுணர்கள் கண்டறிந்தனர்.

இவர்கள், பின்லாடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் பற்றிய வார்த்தைகள், படங்கள், வீடியோக்கள், "லிங்க்' எனப்படும் இணைப்புகளின் மூலம், "வைரஸ்'களைப் பரப்பி வருகின்றனர். இந்த, "வைரஸ்'கள், கணினிகளின் செயல்பாட்டையே நிறுத்திவிடும் தன்மை கொண்டவை.அது மட்டுமல்லாமல், பி.பி.சி., - ஏ.பி.சி., - சி.என்.என்., போன்ற பிரபல செய்தி நிறுவனங்களின் பெயர்களையும் இணையதளத் திருடர்கள் பயன்படுத்துகின்றனர்."கூகுள்' இணையதளத்தில் படங்களைத் தேடும் பகுதியில் சில, "வைரஸ்' பரப்பும் படங்களை இணைத்து அவற்றின் மூலமும் வெகுவேகமாக, "வைரஸ்'களைப் பரப்பி வருகின்றனர்.

அதனால், "பெஸ்ட் ஆன்ட்டி வைரஸ் 2011', இஸ்லாமாபாத், அல்-குவைதா, நேவி சீல்ஸ், ஒபாமா அட்ரஸ், ஒசாமா பின்லாடன் டெட், ஒசாமா பின்லாடன் டெட் 2011, ஒசாமா பின்லாடன் டெட் ஆர் அலைவ் ஆகிய வார்த்தைகளுடன் கூடிய படங்கள், இணையதளங்கள், செய்தித் துணுக்குகள் மற்றும், "லிங்க்' வந்தால், அவற்றை, "க்ளிக்' செய்து தொடர வேண்டாம் என, நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபோன்ற வைரஸ்களை, ட்விட்டர் மற்றும் பேஸ்புக் வழியாகவும் இணையதளத் திருடர்கள் பரப்பி வருவதால், அந்த சமூக இணையதளங்களில் இருப்பவர்கள் செய்திகளைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.குறிப்பாக பேஸ்புக்கில் வரும் விளம்பரங்கள் விஷயத்தில் கவனத்துடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.இந்த, "வைரஸ்'களைத் தடுக்க, தனி நபர்கள் தங்கள் கணினிகளில், தரம் வாய்ந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருட்களைப் பதிவிட வேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.பிரிட்டன் இளவரசர் வில்லியம் திருமணம், ஜப்பான் சுனாமி ஆகிய சம்பவங்களின் போதும் இதுபோன்ற, "வைரஸ்' பரப்பல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.