ஒஸாமா வீரமரணம் - அமெரிக்காவுக்கு சரத் பொன்சேக்கா பாராட்டு
ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் யுத்த காலத்தில் இராணுவம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் முகம் கொடுக்க தான் தயாராகவுள்ளதாக முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தன் கட்டடளையின்படி செயற்பட்ட படையினர் தொடர்பில் பொறுப்பேற்றுக் கொள்ள தான் விரும்புவதாகவும் சிறை வைக்கப்பட்டுள்ள சரத்பொன்சேனா, ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்ததாக பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் கொண்ட பான் கீ மூனின் அறிக்கையிற்கு முகம் கொடுக்க தயாராகவுளள்ளேன் என சரத் பொன்சேகா மேல் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் இலங்கை அரசுக்கு எதிரான குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இறுதிக் கட்டப்போரில் பொது மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. .
அத்தோடு, ஒசாமா பின்லேடன் மரணம் தொடர்பில் சரத் பொன்சேகா அமெரிக்க இராணுவத்தினருக்கு தனது பாராட்டினை தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஒசாமாவை அழித்ததற்காக பராக் ஒபாமா பாரிய பதாகைகளை அமைக்கவில்லையெனவும் படைப்பிரதானியை வெளியே அனுப்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment