92 கோடி ரூ செலவில் 3000 அவுஸ்திரேலியா பசுக்களை இறக்குமதி செய்கிறது இலங்கை

பால் உற்பத்தியின் மேம்பாட்டுக்காக மூவாயிரம் கறவை பசுக்களை அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சுமார் 9.2 கோடி ரூபா செலவில் இவற்றை இறக்குமதி செய்ய உள்ளதாக கால்நடைகள் மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் எச். ஆர். மித்திரபால தெரிவித்தார்.
வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் அண்மையில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு என்பன காரணமாக சுமார் ஒரு இலட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் அதன் காரணமாக ஹைலண்ட் பால் மா உற்பத்தி பதினைந்து வீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கால்நடை அபிவிருத்தி அமைச்சு தெரிவிக்கின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள ஹைலன்ட் பால் மாவிற்கான தட்டுப்பாட்டினை தீர்ப்பதற்காக அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மித்திரபால தெரிவித்தார்.
Post a Comment