ஒஸாமா உயிர்த்தியாகம் செய்திருந்தால் அது மெகா வெற்றி - தலிபான் அறிவிப்பு
அல் காய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கப்போவதாக ஆப்கனில் உள்ள தலிபான் கமாண்டர் ஒருவர் தெரிவித்துள்ளார். குடோஸ் என்ற பெயர்கொண்ட அந்த கமாண்டர், பின்லேடன் கொல்லப்பட்டதால் ஜிகாதுக்கு எந்த மாற்றமும் வந்துவிடாது. அல் காய்தாவின் தலைவர் ஒசாமா. ஜிகாதில் அவர் சக்திவாய்ந்தவர். அவரது இழப்பு முஜாகிதீனுக்கு பெரிய வேதனையாக இருக்கும். ஆனால் பின்லேடனின் மரணம் ஜிகாதை நிறுத்திவிடாது. காஃபிர்களிடம்(முஸ்லீம் அல்லாதவர்களிடம்) இருந்து நமது இடத்தை விடுவிக்கும்வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.
பின்லேடனின் மறைவுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தனது அமைப்பினர் புதிய நடவடிக்கை ஒன்றை தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகக் தெரிவித்த அவர், இதேபோன்ற நடவடிக்கையை பல்வேறு அமைப்பினரும் தொடங்க உள்ளனர் என்றார்.
பின்லேடன் கொல்லப்பட்ட செய்தி உண்மையானதுதானா என்பது குறித்து தலிபான்களிடையே ஏராளமான சந்தேகங்கள் உள்ளதாக தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். எனினும் அவர் இறந்திருந்தால் அது எங்களது போராட்டத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தும் எனக் கருதவில்லை என்றார் அவர்.
இதனிடையே பின்லேடன் இறந்ததை தெஹ்ரிக்ஃஇ-தலிபான் பாகிஸ்தான் செய்தித்தொடர்பாளர் அசானுல்லா அசான் உறுதிப்படுத்தினார். அவர் கொல்லப்பட்டதற்கு தங்களது அமைப்பு பழிவாங்க உள்லதாக பாகிஸ்தான் ஊடகத்திடம் வெளியிட்ட ஆடியோ செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவோம். தலிபான்களுக்கு பாகிஸ்தான் நாடுதான் முதல் குறி. அமெரிக்கா அடுத்ததுதான் என அந்த ஆடியோ செய்தியில் அசானுல்லா அசான் குறிப்பிட்டுள்ளார்.
தலிபான்களின் ஹிட்லிஸ்டில் பாகிஸ்தான் தலைவர்கள் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி மற்றும் பாகிஸ்தான் ராணுவம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது குழுவின் முதல் தாக்குதல் இலக்காக உள்ளதாக அவர் கூறினார்.
பின்லேடனைக் கொன்றதற்கு அமெரிக்கா மகிழ்ச்சி அடையக்கூடாது. அவரைக் கொல்ல அமெரிக்காவுக்கு 10 ஆண்டுகள் ஆகியுள்ளது என்றார் அவர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேனசிர் புட்டோவை கொல்ல 2007-ல் திட்டம் தீட்டினோம். திட்டம் தீட்டிய 3 மாதங்களுக்குள் மனிதவெடிகுண்டு அனுப்பி அவரைக் கொன்றுவிட்டோம். ஆனால் பின்லேடனைக் கொல்ல திட்டமிட்டு, அவரைக் கொல்வதற்கு அமெரிக்கா 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

Post a Comment