முஸ்லிம் போராளி ஒஸாமா புகைப்படங்களில் சந்தேகம் (வீடியோ இணைப்பு)
லண்டன் "கார்டியன்'
அமெரிக்கப்படையால் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்ட அல்குவைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடன் குறித்த புகைப்படங்கள் முதலில் பாக். செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டிருந்தது. அந்தப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழும்பியுள்ளன.
பின்லாடனின் குண்டு பாய்ந்த முகம் என்று பாகிஸ்தான் இணையதளம் வெளியிட்ட படத்தை, அனைத்து ஊடகங்களும் எடுத்துக் கொண்ட கொஞ்ச நேரத்தில், அந்த படத்தில் உண்மையில்லை; இரண்டு
வருடத்திற்கு முன் இறந்த ஒருவரின் முகத்தோடு "மார்பிங்' முறையில் உருவாக்கிய படமே இது என்று, அதற்கான ஆதாரத்துடன், லண்டனில் இருந்து வெளியாகும், "கார்டியன்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. புகைப்பட ஆதாரத்துடன் கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment