Header Ads



ஒசாமா பின்லாடன் வீரமரணமடைந்தது எப்படி?

ஒசாமா பின்லாடன் பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் பதுங்கி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் மாற்று உடையில் சென்று கண்காணித்து எப்படி கொல்வது என திட்டமிட்டுள்ளனர். ஒரு வாரத்தில் இந்த ஆப்ரேஷன் கச்சிதமாக முடிக்கப்பட்டது. எப்போதும் வனப்பகுதி , மலைப்பள்ளத்தாக்கில்தான் ஒசாமா பதுங்கி இருப்பார் என்ற செய்தியைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம் இந்தமுறை இஸ்லாமாபாத் நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஒசாமா தங்கியிருந்திருக்கிறார். இதனையடுத்து உளவு துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தி ஒசாமாவை கொன்றனர். இந்த பண்ணை வீட்டின் வெளியே ஒசாமா இறுதிவரை போராடி வபாத்தானார். 

 பராக் ஒபாமா மகிழ்ச்சி: பின்லாடன் இறந்த தகவலை அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதி செய்தார். நாட்டு மக்களுக்கு டி.வி., மூலம் அறிவித்த போது அமெரிக்காவின் நீண்டகால ஆசை நிறைவேறியிருக்கிறது என்றும், நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதாகவும் கூறினார். அவர் மேலும் கூறுகையில், 10 ஆண்டு காலத்துக்கும் மேலாக ஒசாமா பின் லேடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் , உளவு அதிகாரிகளுக்கு அமெரிக்கா மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. 

இந்த வெற்றி செப்டம்பர் 11ம் தேதி இரட்டைக் கோபுர தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் ஆத்ம சாந்திக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அந்த பயங்கரவாத தாக்குதலில் உற்றார் , உறவினர்களை பலி கொடுத்த அமெரிக்க குடும்பங்களை மறந்து விடவில்லை. இந்த தருணத்தில் அவர்களை நினைவு கூறுகிறோம். அல்குவைதாவை அழிக்கும் பணி தொடர்ந்து நடக்கும். இத்துடன் முடிவதில்லை. இவ்வாறு ஒபாமா கூறினார். 

அமெரிக்காவின் சிம்மசொப்பனமாக விளங்கிய ஒசாமா பின்லாடன் பாகிஸ்தானில்இருந்தபோது அமெரிக்க உளவுப்படையினரின் . தாக்குதலில் வபாத்தாகியுள்ளார். எனினும் இதுவரை இன்றைய ஒசாமா மரணம் குறித்து அல்குவைதா அமைப்பினர் எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை. 

பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்க உயர் ராணுவ நடவடிக்கைக் குழு அதிகாரி ஒருவர் இதுகுறித்துக் கூறும்போது, ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் நடைபெற்ற தரைவழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். கடந்த வாரமே இது நிகழ்ந்துவிட்டது. இருப்பினும் உறுதிப்படுத்துவதற்காகக் காத்திருந்தோம் என்று தெரிவித்தார்.

இந்த முறை ஒஸாமாவின் உடலை டி.என்.ஏ., டெஸ்ட் மூலம் ஒசாமாதான் என்று உறுதி செய்யப்பட்டதாக அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.  இன்றைய நாள் அமெரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பான நாள் என அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்சின் தலைமை அதிகாரி ஆண்டிகார்ட்டு கூறியுள்ளார்.




No comments

Powered by Blogger.