முஸ்லிம் போராளி ஒஸாமா பின் லேடன் வீரமரணம் (புதிய வீடியோ இணைப்பு)
பாகிஸ்தான் தலைநகரிலிருந்து 100 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள அட்டோபாபாத்தில் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த இடத்தினை நெருங்கிச் சென்றவேளையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், பாதுகாப்பு கேடயமாக செயற்பட்ட பெண்னொருவரும் கொல்லப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகியே ஒசாமா பின்லேடனும் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த துப்பாக்கி பிரயோகம் இரு தரப்பினரிடையேம் சுமார் 40 நிமிடம் நடைபெற்றதாகவும், துப்பாக்கி பிரயோகத்தில் எந்தவொரு அமெரிக்க பாதுகாப்பு பிரிவு குழுவினருக்கும் உயிர் ஆபாத்தில்லை எனவும் உத்தியோக பூர்வ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Post a Comment