மஹிந்தவுக்கு எதிராக சென்னை நீதிமன்றில் மனுத் தாக்கல்
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் தலைவருக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி சென்னை மேல் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அயர்லாந்து டுப்லின் நகரில் உள்ள நீதிமன்றம் ஒன்று இலங்கை ஜனாதிபதியை போர் குற்றவாளி என அறிவித்துள்ளதாக மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கும்படி இந்திய ஜனாதிபதி மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோரை மனுதாரர் தனது மனு மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழர்கள் அன்றி வேறு இனத்தவர்களுக்கு பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டால் இந்திய அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தமிழர்கள் பிரச்சினையை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை எனவும் மனுதாரர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Post a Comment