Header Ads



இலங்கையை அவமானப்படுத்த முயலும் சக்திகளை ரஸ்யா எதிர்க்குமாம்


இலங்கைக்கு எதிராக ஐ.நா.வின் எந்தவொரு சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் அதற்கு எதிராக ரஸ்யா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடிக்கும் என்று கொழும்புக்கான ரஸ்யத் தூதுவர் விளாடிமிர் மிக்கலோவ் தெரிவித்துள்ளார். 

“இலங்கைக்கு தண்டனை வழங்கவோ அதை அவமானப்படுத்தவோ சில சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகளை ரஸ்யா எதிர்த்து நிற்கும்.  ஐ.நா.வின் போர்க்குற்ற அறிக்கைக்கு எதிராக நாம் வீட்டோவைப் பயன்படுத்த மாட்டோம். ஆனால் அதைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிரான தீர்மானம் எதுவும் கொண்டு வரப்பட்டால், ரஸ்யா வீட்டோவை பயன்படுத்தலாம். 

ஐ.நா அறிக்கையை விமர்சிக்கும் வகையிலான தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதற்கு ரஸ்யா அதரவளிக்கும். எவ்வாறு இருந்தபோதும், பாதுகாப்புச்சபையில்  இலங்கைக்கு ஆதரவாகவோ எதிராகவோ எந்தவொரு தீர்மானமும் கொண்டு வரப்படுவதற்கான நகர்வுகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் இலங்கைக்குஆதரவாகவே ரஸ்யா நிற்கும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்

No comments

Powered by Blogger.