வபாத்தான 6 முஸ்லிம்களினதும் ஜனாஸாக்கள் நல்லடக்கம், 12 ஆயிரம் பேர் பங்கேற்பு

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (29.04.2011) இரவு 7.30 மணியளவில் மன்னம்பிட்டியில் வாகன விபத்தில் உயிரிழந்த ஐ.எல். கதீஜா உம்மா (பெண் 64), ஏ.எம். சித்தி சாக்கிறா (பெண் 35), எம். ஜே. சுஆதா (பெண் 30), எம். ஜஹான் (ஆண் 32), ஏ. பாத்திமா இன்ஸாப் (பெண் 12), எம். ஏ. றித்திக் றெமி (ஆண் 5), ஆகியோரின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று இரவு சனிக்கிழமை 9.30 மணிக்கு மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு மருதமுனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த ஜனாஸா நல்லடக்கத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சருமான ரவுப் ஹக்கீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். சுபைர், பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம்,எச்.எம்.எம். ஹரீஸ், முன்னாள் அமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல். துல்கர் நயீம், ஏ. எம். ஜமீல், கே. எம். ஏ. ரசாக் (ஜாவத்), கல்முனை மாநகர முதல்வர் செனெட்டர் மசூர் மௌலானா உள்ளிட்ட உள்ளூர் வெளியூர்களை சேர்ந்த பனிரெண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டனர்
Post a Comment