கோழி திருடிய பாடசாலை சிறுவர்களை நன்நடத்தைப் பள்ளிக்கு அனுப்பிய நீதிபதி
கிளிநொச்சி, முழங்காவில் அன்பு புரம் கிராமத்தில் வளர்ப்புக் கோழிகளைத் திருடிய குற்றச் சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்ட மூன்று சிறுவர்களை மாவ ட்ட சிறுவர் நன்நடத்தைப் பள்ளியில் இணைத்துக் கொள்ளுமாறு மாவட்ட நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மேற்படி பிரதேசத்திலுள்ள இரண்டு வீடுகளில் புகுந்த 17 வயது, 16 வயது, 12 வயது ஆகிய வயதுகளையுடைய சிறார்கள் மூவர் 4 ஆயிரத்து 500 ரூபா மற்றும் ஆயிரம் ரூபா பெறுமதியான வளர்ப்புக் கோழிகளை திருடினர் என்ற சந்தேகத்தின் பெயரில் முழங்காவில் பொலிஸாரால் செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் சிறார்கள் மூவரும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள். சிறார்கள் என்பதால் அவர்கள் மீதான வழக்குகளை இரத்துச் செய்து அவர்களை சிறுவர் நன்நடத்தைப் பள்ளியில் இணைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய மேற்படி சிறார்கள் மூவரும் கரைச்சி பிரதேச சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் இ. ராஜன் என்பவரின் பொறுப்பில் எடுக்கப்பட்டு நன்னடத்தைப் பள்ளியில் இணைக்கப்பட்டுள்ளனர்

Post a Comment