கையடக்கத் தொலைபேசிகள் மூலம் நிதிமோசடி - பொது மக்களுக்கு எச்சரிக்கை
கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக இடம்பெறுகின்ற நிதி மோசடிகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக "சர்ட்" எனப்படும் இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் குறிப்பிடுகின்றது.
சர்வதேச ரீதியாக இடம்பெறுகின்ற இந்த நிதி மோசடிகள், இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பரவக்கூடிய கூடுதல் அபாயம் நிலவுவதாக அந்த ஒன்றியத்தின் தகவல் பாதுகாப்பு சிரேஷ்ட பொறியியலாளர் ரோஹண பல்லியகுரு கூறினார்.
இது தொடர்பாக மைக்ரோ சொவ்ட் நிறுவனத்தினால், சிங்கப்பூர் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது போன்ற முறைகேடுகள் குறித்து முறைப்பாடுகள் இருப்பின், தமது ஒன்றியத்திற்கு தெரியப்படுத்துமாறும் ரோஹண பல்லியகுரு குறிப்பிட்டார்.

Post a Comment