Header Ads



ஒபாமாவின் செய்தியுடன் இலங்கை வருகிறார் பிளேக்

இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை வெளியிட்டதன் பின்னர் ஒபாமா நிர்வாகத்திலுள்ள தெற்கு,மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேட் பிளேக் இலங்கைக்கு இந்த வாரம் வருகை தரவுள்ளார்.

 இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐந்து நாள் பயணத்தை பிளேக் ஆரம்பித்துள்ளார். கொழும்பிலுள்ள அரசாங்கத்திற்கான தனது செய்தியை வழங்கும் வரை அதனை அந்தரங்கமாக வைத்திருக்கப் போவதாக அவர் கூறியுள்ளதாக பி.ரி.ஐ. செய்திச் சேவை தெரிவித்தது.  

பொதுவாக இலங்கையுடனான எமது உறவுகளை முன்னோக்கி நகர்த்துவதற்கு நாம் விரும்புகிறோம் என்று கொழும்பு பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் அவர் தெரிவித்துள்ளார். நிபுணர் குழுவின் அறிக்கையில் சகலருமே மிகவும் கவனத்தை செலுத்தியிருந்தாலும் எமது நிகழ்ச்சி நிரலிலுள்ள முழுமையான விடயங்கள் பற்றி நாம் கலந்துரையாட விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார். இலங்கையின் வட பகுதிக்கு பயணம் செய்வதற்கான வாய்ப்பை தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் தூதுவராக ரொபேட் பிளேக் இருந்துள்ளார். யு.எஸ்.எயிட் டின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சித் திட்டங்களை பார்வையிடவுள்ள அவர் கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் உள்ளூர் தலைவர்களை சந்திக்கவுள்ளார். "இந்தப் பகுதிகள் முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்தன. நான் இலங்கையில் இருந்த போது அவை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆதலால் அந்த நகரங்களை என்னால் பார்த்திருக்க முடியவில்லை' என்று பிளேக் கூறியுள்ளார்.  

No comments

Powered by Blogger.