Header Ads



பிரிட்டிஷ் அரச குடும்ப திருமணமும், பேஸ்புக் சாதனையும்

உலகம் முழுவதும் பாரம்பரிய ஊடகங்ளாயினும் சரி, நவீன ஊடகங்களாயினும் சரி அவற்றை ஆக்கிரமித்திருந்த ஒரே விடயம் பிரிட்டிஷ் அரச குடும்ப திருமணம் தான்.

கோடிக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வை தொலைக்காட்சி வழியாகப் பார்த்து மகிழ்ந்த அதேவேளை இன்னும் இலட்சக்கணக்கானவர்கள் உடனடி தகவல்களை அறிந்து கொள்வதற்காக இணையத்தளங்களையும் நாடினர். 

உலகளாவிய ரீதியில் இணையத்தளப் பக்கங்கள் புரட்டப்படுவதை, அல்லது இணையத்தளப் பக்கங்களின் போக்குவரத்தை அவதானிக்கும் அகாமாய் வெளியிட்டுள்ள தகவலின் படி நேற்று நண்பகல் 1.30 அளவில் இணையத்தளப் பக்கங்கள் அதிகம் புரட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

குறிப்பிட்ட இந்த நேரத்தில் 5.3 மில்லியன் (53 லட்சம்) இணையப் பக்கங்கள் பாவனையில் இருந்துள்ளன. இது இணையத்தள வரலாற்றில் ஆறாவது பெரிய நிகழ்வாகப் பதிவாகியுள்ளது. திருமணம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது பிரிட்டனில் மட்டும் பேஸ்புக்கில் 268777 கருத்துக்கள் பதிவாகியுள்ளன. 

இது ஒரு நொடிக்கு 74 என்ற வீதத்தில் அமைந்துள்ளது. டுவிட்டர் சேவையிலும் ஒரு நொடிக்கு 67 என்ற வீதத்தில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. உலகப் பிரபலம் பெற்ற வர்ணணையாளர்கள் தமது டுவிட்டர் பக்கங்களூடாக நேரடி வர்ணனைகளையும் வழங்கிக் கொண்டிருந்தனர்.  கூகுள் தனது முகப்புப் பக்கத்தை குதிரைத் தேர் வண்டிகளுடன் கூடிய பக்கமாக அரச குடும்பத் திருமணத்துக்காக விஷேடமாக அர்ப்பணம் செய்திருந்தது. 


No comments

Powered by Blogger.