யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடி அகற்ற விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
யாழ் குடாநாட்டில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுத்த ஏற்கனவே கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களையும், புதியவர்களையும் இணைத்துக் கொள்ளும் வேலைத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ் குடா நாட்டில் இன்னமும் மீளக் குடியமர்த்தப்படாதிருக்கும் இடம் பெயர்ந்த நிலையிலுள்ள மக்களை துரித கதியில் மீளக் குடியமர்த்துவதற்கும், விளை நிலங்கள் மற்றும் காணிகளில் இன்னமும் அகற்றப்படாதிருக்கும் கண்ணி வெடிகளை விரைவில் அகற்றி இக் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது சில தொண்டு நிறுவனங்களும் இராணுவத்தினரும் கண்ணி வெடிகளை அகற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற போதிலும், அவை போதுமானதாக இல்லாத காரணத்தினால் மக்களது மீள் குடியேற்றங்களில் தொடர்ந்து தாமத நிலை காணப்படுவதை அவதானத்தில் கொண்டதன் பிரகாரமே கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தவென மேலும் பணியாளர்களை இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் குறித்த பணியில் இணைந்து கொள்ள விரும்புவர்கள் எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்பதாக ´கண்ணி வெடிகளை அகற்றும் பணி, மகேஸ்வரி நிதியம், இல. 110, 4ம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.

Post a Comment