Header Ads



இலங்கை சார்பில் பீ.எம்.அம்சா பங்கேற்பு, இலங்கையின் நீலக்கல்லை அணியும் மணமகள்


பிரிட்டன் இளவரசர் வில்லியமஸின் திருமண நிகழ்வில் பிரித்தானியாவுக்கான இலங்கையின் பதில் தூதுவர் பீ.எம். அம்சாவும் பங்கெடுத்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கோ அல்லது முக்கிய அரசியல் பிரமுகுர்களுக்கோ இளவரசரின் திருமண நிகழ்வில் பங்கேற்க அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்படாத நிலையில், திருமண நிகழ்வில் பங்குகொள்ளுமாறு பிரிட்டனுக்கான இலங்கைத் தூதருக்கு திருமண அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரிட்டனுக்கான இலங்கையின் பதில் தூதுவராக கடமையாற்றும் அம்சா இளவரசரின் திருமண நிகழ்வில் தற்போது பற்கேற்றுள்ளதாக அறியவருகிறது.

அதேவேளை மணமகளான கேட் அணியும் திருமண மோதிரம் இலங்கையின் அரியவகை நீலக்கல் மூலம் வடிவமைக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த திருமண மோதிரத்திலுள்ள கல் இரத்தினபுரியிலுள்ள நிமல் பத்திரன என்பவருக்கு சொந்தமான இரத்தினக்கல் சுரங்கத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டதாகும். இந்த இரத்தினக்கல் விலை மதிப்பற்றதென நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் எம். மெக்கி ஹாசீம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.