பஹ்ரைனில் மன்னருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியோருக்கு மரணதண்டனை
எகிப்து மற்றும் துனிசியாவை தொடர்ந்து வளைகுடா நாடான பக்ரைனில் கடந்த மார்ச் மாதம் முதல் போராட்டம் வெடித்தது. மன்னருக்கு எதிராக பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதில் 30 பேர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து சவுதி அரேபியா ராணுவத்தின் உதவியுடன் போராட்டம் ஒடுக்கப்பட்டது.
தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது.போராட்டத்தின் போது எதிர்க்கட்சி பிரமுகர்கள், 7 பேர் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களை கொலை செய்ய முன் கூட்டியே அவர்கள் திட்டமிட்ட தாக புகார் கூறப்பட்டது. போராட்டத்தின் போது 2 போலீசார் கொல்லப்பட்டனர்.
அதற்கான வீடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்டன. அவர்கள் மீது ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று 4 பேருக்கு மரண தண்டனை விதித்து ராணுவ கோர்ட்டு தீர்ப்பளித்தது. மற்ற 3 பேரின் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே, 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு பக்ரைனின் மனித உரிமை அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு மீண்டும் கடுமையான போராட்டம் ஏற்படும் என எச்சரித்துள்ளது.

Post a Comment