இந்த அமைச்சரை உங்களுக்கு தெரியுமா..?
பொதுசன உறவுகள் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சர் மேர்வின் சில்வா சிறுவர்களுக்கென தயாரிக்கப்படும் சுரங்கென லொவின் திரைப்படத்தில் துட்டுகெமுனு அரசராக வேடமேற்று நடிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று வெள்ளிக்கிழமை சிகிரியாவில் இடம்பெற்றது.
அமைச்சர் மேர்வின் சில்வா ஊடகவிலாளர்களை மிரட்டுவதிலும், அப்பாவி பொது மக்களிடம் கப்பம் கோருவதிலும், முஸ்லிம்களுக்கு எதிரான விஷக் கருத்துக்களை கக்குவதிலும், அராஜகம் புரிவதிலும் பெயர் பெற்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு அமைச்சர்தான் சிறுவர்களுக்காக தயாரிக்கப்படும் படத்தில் துட்டுகெமுனுவாக வேடமேற்று நடிக்கின்றமையும் கவனிக்கத்தக்கது.

Post a Comment