Header Ads



எமக்கு வந்த ஆலோசனை

புலம்பெயர்ந்துள்ள யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி முஸ்லிம்களையும் அவை சார் அமைப்புக்களையும் ஒன்றுசேர்க்கும் நோக்குடன் அமைக்கப்பட்டுள்ள அமைப்பு குறித்த தகவல்களை நாம் உங்களுடன் ஏற்கனவே பகிர்ந்து கொண்டிருந்தோம்.

இந்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் உள்ளங்களிடமிருந்து எமக்கு அதுதொடர்பில் ஏராளமான பயனுள்ள கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. சிலர் ''புலம்பெயர்ந்துள்ள இலங்கை வடக்கு முஸ்லிம்கள்'' என அமைப்பின் பெயரை மாற்றம் செய்யுமாறு கோரியிருந்தனர். அவர்களின் ஆலோசனையில் உள்ள நியாயம் ஏற்றுக்கொள்ளதக்கதாக அமைந்துள்ளதை நாம் ஒப்புக்கொள்கிறோம்.

இருந்தபோதும் இது தொடர்பிலான பரந்தளவு ஆலோசனைகளை பெறவும் எதிர்பார்த்துள்ளோம். இந்நிலையில் இந்த பெயர் மாற்றம் குறித்த உங்கள் சிறப்பு ஆலோசகைளையும் நாம் வரவேற்கிறோம். உங்கள் ஆலோசனைகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டிய ஈமெயில் முகவரி

diasporamuslim1990@yahoo.com 
                    OR
jaffnamuslim1990@yahoo.com


No comments

Powered by Blogger.