இலங்கைக்கெதிரான பனிப்போருக்கு முயற்சி - பிரான்ஸிற்கான தூதுவர் குற்றச்சாட்டு

பயங்கரவாதத்திலிருந்து இலங்கை பெற்ற யுத்த வெற்றியை திசை திருப்பும் முகமாக இலங்கைக்கு எதிரான பனிப்போரை உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரான்சுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
தமிழீழத்தை வெற்றி கொள்ளும் முயற்சிகளை வேறுவிதத்தில் முன்னெடுத்துவருகின்றனர். ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையானது பான் கீ மூனிற்கு ஆலோசனை வழங்கவே நியமிக்கப்பட்டது. நிபுணர்குழுவின் அறிக்கையை தாமதப்படுத்தும்படி அரசாங்கம் ஐ.நாவை கேட்டுக்கொண்டது. நிபுணர்குழுவின் அறிக்கையில் அடங்கியுள்ள விடயங்களுக்கு பயப்பட்டு அல்ல.
இந்த நிபுணர்குழு தனது வரம்பை மீறிச் செயற்பட்டுள்ளது என்பதானாலேயாகும் என ஐ.நாவுக்கான முன்னாள் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியுமான தயான் ஜயதிலக மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment