சோதிடரின் வீட்டை உடைத்து, அரசியல்வாதிகளின் குறிப்புகள் திருட்டு

பிரபல பெண் சோதிடரான நிலூகா ஏக்கநாயக்கவின் வீடு உடைக்கப்பட்டு லொக்கர் ஒன்றினுள் வைக்கப்பட்டிருந்த முக்கிய அரசியல்வாதிகளின் சாதகக் குறிப்புகள் திருடப்பட்டுள்ளன.
இலங்கையின் முக்கிய சோதிடர்களில் நிலூகா ஏக்கநாயக்கவும் குறிப்பிடத்தக்கவர். பிரதி அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரின் சகோதரி உறவு முறையானவர்.
ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் பிரதான ஆலோசகராக கடமையாற்றியிருந்த அவர் அக்காலத்தில் லேக்ஹவுஸ் வெளியீடான சுபசெத சோதிடப் பத்திரிகையின் ஆலோசகராகவும் கடமையாற்றியிருந்தார்.
அதன் பின் அரசாங்கத்திலிருந்து மங்கள சமரவீர தரப்பினர் ஒதுங்கிச் சென்று தனிக்கட்சி ஆரம்பித்த போது அதன் பொருளாளராகவும் கடமையாற்றியுள்ளார். ஆயினும் கட்சி வேறுபாடின்றி நிலூகா ஏக்கநாயக்கவிடம் அனைத்து அரசியல்வாதிகளும் சோதிட ஆலோசனை பெற்று வருவது வழக்கமாகும். அதன் காரணமாக முக்கியமான அரசியல்வாதிகள் பலரின் சாதகக் குறிப்புகள் அவரிடம் பாதுகாப்பாக இருந்தன.
அவ்வாறான நிலையில் அவரின் வீடு உடைக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த முக்கிய அரசியல்வாதிகளின் சாதகக் குறிப்புகள் மட்டும் திருடப்பட்டுள்ளன
Post a Comment