ஒழுக்கமுள்ள புலிகளா முஸ்லிம்களை படுகொலை செய்தனர் - ஹெகலிய கேள்வி

ஒழுக்க விழுமியமுள்ள குழு என்பதாலா பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை புலிகள் கொலை செய்தனரென அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கேள்வியெழுப்பியுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்,
சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது. இலங்கை தொடர்பில் ஒருதலைப்பட்சமாக முடிவு எடுக்க ஐ.நா. செயலாளருக்கு உரிமை கிடையாது. இந்த அறிக்கை குறித்து தேசிய மட்டத்திலும்இ சர்வதேச மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற விடயங்களை கே.பியினூடாக பகிரங்கப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய நிபுணர் குழுவொன்றை நியமித்ததை நாம் ஆரம்பத்திலேயே நிராகரித்தோம். இந்த செயற்பாட்டை ஏற்க முடியாது.
புலிகள் இயக்கம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அந்த அமைப்பு ஒழுக்கக் கட்டமைப்பின் கீழ் தேசப்பற்றுடன் செயற்பட்டதாகவும் தருஸ்மன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உலகில் மிக மோசமான பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன முன்பு தெரிவித்தன. அந்த நாடுகளுடன் தொடர்புடைய நிபுணர் குழுவே இன்று புலிகளை இவ்வாறு உயர்த்திக் கூறியுள்ளது.
ஒழுக்க விழுமியமுள்ள குழு என்பதாலா அவை பிக்குகளை மட்டுமன்றி பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள், ராஜீவ் காந்தி போன்றோரையும் கொலை செய்தது. இரத்தவெறி பிடித்த குரூர குழுவாகவே புலிகள் செயற்பட்டனர் என்றார்.
Post a Comment