ஹமாஸ் - பதா உடன்படிக்கையில் கைச்சாத்து
கடந்த நான்கு ஆண்டுகளாக பிரிந்து செயற்பட்ட பலஸ்தீனின் பதா கட்சியும், ஹமாஸ் இயக்கமும் எதிர்கால செயற்பாடுகளில் உடன்பாடு கண்டுள்ளன.
கெய்ரோவில் நடைபெற்ற இரு அமைப்புகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக எகிப்து புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பது மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பு பலஸ்தீனின் காஸா பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதோடு பதா மேற்குக் கரையில் ஆட்சி நடத்துகின்றமை குறிப்பிடத் தக்கது.

Post a Comment