புலம்பெயர்ந்த யாழ்ப்பாணம்/கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் யாழ்ப்பாண/கிளிநொச்சி முஸ்லிம்களையும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களையும் ஒன்றுபடுத்தி, ஒரேகுடையின் கீழ் கொண்டுவரும் உயர் நோக்குடன் புலம்பெயர்ந்த யாழ்ப்பாணம்/கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் இன்ஷா அல்லாஹ் விரைவில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, யாழ் முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் பல தரப்பட்டவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவிருக்கும் புலம்பெயர்ந்த யாழ்ப்பாணம்/ கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் விரைவில் ஒவ்வொரு நாட்டிலும் தமது பிரதிநிதிகளையும் நியமிக்கவுள்ளது.
நாடுகளின் பிரதிநிதிகளே புலம்பெயர்ந்த யாழ்ப்பாணம்/கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன நிர்வாக குழுவில் இடம்பெறுவர். அவர்களே சம்மேளனத்தின் இயக்கு சக்திகளாகவும் தொழிற்படுவர்.
அதேவேளை புலம்பெயர்ந்த யாழ்ப்பாணம்/கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன இடைக்கால செயலாளர் கடமையை யாழ் முஸ்லிம் வலைத்தளம் (ஊடகவியலாளர்) மேற்கொள்ளும் சம்மேளனத்தின் ஒன்றுகூடலின் போது புலம்பெயர்ந்த சம்மேளனத்திற்கு நிரந்தர செயலாளர் தெரிவு செய்யப்படுவார்.
அதேநேரம் புலம்பெயர்ந்து வாழும் யாழ், கிளிநொச்சி முஸ்லிம்களுக்கான ஒன்றுகூடலுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்த ஒன்றுகூடலுக்கான செலவுகள் குறித்து தற்போது கவனம் செலுத்தப்படும் நிலையில், ஒன்றுகூடலுக்கு சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புகளை பெறுவது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
அவ்வாறு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெறுவதன் மூலம் ஒன்றுகூடலுக்கான பெரும் செலவை தவிர்க்கலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே அந்த நிறுவனங்களின் உதவி நாடப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அத்துடன் புலப்பெயர்ந்து வாழும் யாழ், கிளிநொச்சி முஸ்லிம்களையும், அவை சார் அமைப்புக்களையும் ஒரேகுடையின் கொண்டுவரும் உயர்நோக்கம் நிறைவேற்றப்பட்டவுடன் யாழ் முஸ்லிம் வலைத்தளமும், அதன் நிறுவனரும் இச்செயற்பாடுகளிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வர்.
உங்கள் ஆரோக்கியமான விமர்சனங்களை தெரிவிக்க விரும்புபவர்கள் கீழ்வரும் ஈமெயில் முகவரியுடன் தொடர்புகொள்ள முடியும். diasporamuslim1990@yahoo.com OR jaffnamuslim1990@yahoo.com
யா அல்லாஹ் எமது நேர்மைமிகு நோக்கத்தை ஏற்றுக்கொள்வாயாக..!
புலம்பெயர்ந்த யாழ்ப்பாணம்/கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்
Post a Comment