Header Ads



இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக பேராடப் போகிறார்களாம் பிரிட்டன் தமிழர்கள்

இலங்கை மீது உள்ள போர்க்குற்றங்களை ஐ.நா . நிரூபித்துள்ளமையினால் பிரித்தானியாவில் மே மாதம் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ளதை புறக்கணிக்க வேண்டும் என பிரித்தானியா இளையோர் அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் ஒக்ஸ்பிறிட்ச் என்ற இடத்தில் எதிர்வரும் மே 14 ஆம் திகதி இலங்கை கிரிக்கட் அணி தனது முதலாவது துடுப்பாட்டத்தை விளையாடவுள்ளது. இலங்கை போர்க்குற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஐ.நா தனது அறிக்கையில் தெரிவித்துள்ள நிலையில் இலங்கை கிரிக்கட் அணியினை இங்கிலாந்து – வேல்ஸ் கிரிக்கட்சபை புறக்கணிக்க வேண்டும். என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

சிம்பாபே தொடர்பில் இவ்வாறானதொரு நடவடிக்கை 2008 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது. றொபேட் முகாபி அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. தென்னாபிரிக்கா தொடர்பிலும் பல தடைகள் முன்னர் கொண்டுவரப்பட்டிருந்தன. தற்போது இலங்கை தொடர்பிலும் அவ்வாறான முடிவை எடுக்கும் காலம் வந்துள்ளது.

போர்க்குற்றங்களை மேற்கொண்ட நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியை பிரித்தானியா வரவேற்கக்கூடாது. எதிர்வரும் மே 14 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.