இரட்டைப் பிரஜாவுரிமைக்கு இலங்கையில் தற்காலிகத் தடை..?
இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குவதற்காக அங்கீகாரம் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் அங்கீகாரத்துக்காக காத்திருந்த விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்புச் செயலாளர் பணிப்புரைக்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்கள அதிகாரியொருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
வேறொரு நாட்டில் குடியுரிமை பெற்ற இலங்கையர் ஒருவருக்கு இலங்கையினுள்ளும் சொத்துக்கள் ஏதாவது இருக்கும் பட்சத்தில் அவர் இரட்டைப் பிரஜாவுரிமை பெற வேண்டுமென்பது இதுவரை கால விதியாக இருந்து வந்தது.
அதன் கீழ் இரட்டைப் பிரஜாவுரிமை பெறும் ஒருவரிடமிருந்து இலங்கை அரசாங்கம் இரண்டு இலட்சம் ரூபாவைக் கட்டணமாக அறவிட்டு வந்தது. அவ்வாறான கட்டணங்கள் இலங்கைக்கு பொருளாதார நலனைத் தரும் என்பதால் கடந்த காலங்களில் இரட்டைப் பிரஜாவுரிமை பெறும் விடயத்தில் புலம்பெயர்கள் ஊக்குவிக்கப்பட்டார்கள்.
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, இத்தாலி, ஸ்வீடன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பிரஜாவுரிமைகளைப் பெற்றுள்ளகளுக்கே இரட்டைப் பிரஜாவுரிமை திட்டத்தின் கீழ் இதுவரை இலங்கையிலும் பிரஜாவுரிமை வழங்கப்பட்டு வந்தது.

ஆனாலும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களான பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் அமெரிக்காவிலும் பிரஜாவுரிமை பெற்ற இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment