ஒபாமாவே முபாரக்கை வீட்டுக்கு அனுப்பினார் - மஹிந்த
அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் மூன்றாம் உலக நாடுகளில் பிரச்சினைகளை ஏற்படுத் துவதற்காக இலங்கையையும் அடக்க முயற்சித்ததாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி உடற்பயிற்சி செய்யும் விதத்தை காண் பதற்காக அலரிமாளிகைக்குச் சென்ற திவயின பத்திரிகையின் ஆசிரியர் காமினி சுமணசேகரவிடம் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். திவயின பத்திரிகையின் ஆசிரியர் ஆச்சரியப்படும் வகையில் ஜனாதிபதி உடற்பயிற்சியில் ஈடுபட்டதுடன் அங்குள்ள தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அமெரிக்க ஜனாதிபதியின் பேட்டியைப் பார்த்துவிட்டு ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி உடற்பயிற்சிகளை முடித்ததும் சர்வதேச அரசியல் குறித்து விவாதிப்பதாகவும் அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் மூன்றாம் உலக நாடுகளில் பிரச்சினை களை ஏற்படுத்துவதாகவும் எகிப்து ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பும் தேவை ஒபாமாவுக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளதுடன் அவற்றுக்கு இலங்கை அடிபணியக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளதாக திவயின ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

Post a Comment