'சிலோன்' க்கு குட்பாய்
தனியார் நிறுவனங்களில் பெயர் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
'சிலோன்' என்று உபயோகப்படுத்தப்படும் சொல் 'ஸ்ரீ லங்கா' (இலங்கை) என்று பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.
இதேவேளை, இலங்கையில் சிற்சில பொது நிறுவனங்களும் 'சிலோன்' என்ற பெயருடன் இணைந்து வைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் 'பான்க் ஒப் சிலோன்' (இலங்கை வங்கி), 'சிலோன் பெற்றோலியம் கோப்பரேஷன்' (இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்), 'சிலோன் இலக்ட்ரிசிட்டி போர்ட்' (இலங்கை மின்சார சபை) மற்றும் 'சிலோன் டுவரிஸ்ட் போர்ட்' (இலங்கை உல்லாசப் பயணச் சபை) ஆகியன சிலோன் என்ற பெயரை பொது நிறுவனங்களின் பெயர்களுள் உள்ளடக்கியுள்ளன.
ஆரம்ப காலங்களில் இலங்கை வரலாற்றைப் பொருத்தவரையில் இலங்கையை ஆக்கிரமித்திருந்த பல்வேறு நாடுகள் நமது நாட்டுக்கு பல்வேறு பெயர்களை வைத்து அழைத்து வந்தனர். இந்நிலையில், கிரேக்கர்கள் 'தப்ரபேன்' என்றும் அரேபியர்கள் 'செரண்டிப்' என்றும் ஆங்கிலேயர்கள் 'சிலோன்' என்றும் அழைக்கப்பட்டது. தற்காலத்தில் இதன் பெயர் சிக்களத்தில் (ஸ்ரீலங்கா) என்றும் தமிழில் இலங்கை என்றும் அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment