தமிழ் அதிகாரிகள் பாரபட்சம், யாழ் முஸ்லிம்கள் பாதிப்பு
யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் வசித்த 80 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அண்மையில் பெய்த கடும் மழையினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 40 குடும்பங்கள் தற்போது யாழ் ஒஸ்மானியாக் கல்லூயில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12 கடும்பங்களுக்கு மாத்திரமே வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏனையவர்கள் தாமும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவகள் என யாழ் கச்சேரிக்கு சென்று கூறியபோதும் அவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லையெனவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்படுகிறது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ள தம்மீது அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சுமத்தி பொம்மைவெளி மஸ்ஜித்துல் அபூபக்கர் பளளிவாசல் நிர்வாகிகள் யாழ் அரச அதிபருக்கு முறைப்பாடொன்றையும் செய்துள்ளனர்.
தமிழ் அரச அதிகாரிகளின் புறக்கணிப்பு தொடர்ந்தால் தாம் ஆர்ப்பாட்டத்தில் இறங்க நேரிடுமெனவும் யாழ் முஸ்லிம்கள் சார்பில் எச்சரிக்கை வீடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment