Header Ads



கண்ணை பறித்து, காதை துண்டிக்க ஈரான் நீதிபதி உத்தரவு


ஈரான் நாட்டில் குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.


 இப்போது வாலிபர் ஒருவரின் கண்ணை பறிப்பதற்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது. 

அந்த வாலிபரின் பெயர் அமீது. இவருக்கும் தாவூத் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அமீது, தாவூத் மீது “ஆசிட்”டை வீசினார். இதில் தாவூத்தின் முகம் முழுவதும் கருகி ஒரு கண் குருடானது. ஒரு காதும் சேதம் அடைந்தது. 

இது தொடர்பாக அமீதை கைது செய்தனர். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி அஜீஸ் முகமது விசாரித்தார்.

அவர் தாவூத்துக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டதோ அதே போல அமீதுக்கும் பாதிப்பு ஏற்பட வேண்டும். எனவே அமீதுவின் ஒரு கண்ணை பறிக்க வேண்டும் ஒரு காதை துண்டிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.