பேசும் படங்கள் பகுதி 23
முல்லைத்தீவு மாவட்டத்தில்"தேசத்திற்கு ஒளியூட்டுவோம்\' வேலைத்திட்டம் மக்களுக்கு கையளிக்கப்படும் நிகழ்வைக் அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஆரம்பித்து வைப்பதையும் அருகில் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் நிற்பதையும் காணலாம்.
ஆப்கானிஸ்தான், காபுலில் மேயர் முகமது யுனுஸ் நவான்திஸ், புதிதாக அமைக்கப்பட்ட சோலார் பவர் தெருவிளக்குகளை திறந்து வைத்து, பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
போலிவியாவின் முன்னாள் கவர்னரும், எதிர்கட்சி தலைவருமான மாரியோ கோஸியோ(இடது), பராகுவேயின் காங்கிரஸ் கட்சியில் உள்ள சாலுஸ்சியானோ சாலினாஸ், பராகுவேயில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.
அடுத்தாண்டுக்கான தென்கொரியாவின் வெளியுறவுக் கொள்கையை வெளியிட்டுப் பேசினார் அந்நாட்டு அதிபர் லீ மியுங் பாக் (மத்தியில்).
பிரேசில், ரியோவில் வரவிருக்கும் 2016ஆம் ஆண்டுக்கான ஒலிபிக் விளையாட்டுக்கான கிராமத்தின் மாதிரியை, அகில உலக கால்பந்து அமைப்பின் தலைவர் ஜோ ஹேவெலென்ச்(இடது), ரியோவின் மேயர் எதுர்டோ பீஸிடம் விளக்கி கூறினார்
ஆஸ்திரேலியாவில் உள்ள குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பலத்த மழை கொட்டிவருகிறது.இதனால் சின்சிலா நகரம் வெள்ளத்தில் மூழ்கி இருக்கும் காட்சி.







Post a Comment