Header Ads



சுதந்திர பாலஸ்தீனத்தை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்

சுதந்திர பாலஸ்தீனத்தை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இதுநாள் வரை அரசாங்கம் பாலஸ்தீனத்தை கொள்கையளவிலேயே ஏற்றுக் கொண்டிருந்தது. இப்போது முழுமையான சுதந்திர நாடாக அங்கீகரிப்பதென அரசு முடிவு செய்துள்ளது.

 பாலஸ்தீனத்துக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி திஸ்ஸ ஜயசிங்க இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது,

உலகின் பல நாடுகள் சுதந்திர பாலஸ்தீனத்தை ஏற்றுக் கொண்டு அறிவித்திருக்கின்றன. இவ்வாறானதொரு நிலைமையில் மிக நீண்ட காலமாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவளித்து வரும் இலங்கையும் சுதந்திர பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மிக விரைவில் இது குறித்து அமைச்சரவைக்கு யோசனையை சமர்ப்பித்து அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளவிருக்கிறார். அதனையடுத்து அரசு இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கும்.

தற்போது பாலஸ்தீன இராஜதந்திர பிரதிநிதி அலுவலகமே செயற்பட்டு வருகிறது. அதன் பிரதிநிதியாக நான் கடமையாற்றி வருகின்றேன். அரசு சுதந்திர பாலஸ்தீனத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டதும் அந்த அலுவலகம் உயர்ஸ்தானிகராலயமாக மாற்றப்படும். அதேபோன்று இலங்கையிலிருக்கும் பாலஸ்தீன பிரதிநிதி அலுவலகமும் தூதுவராலயமாக மாறும் எனவும் கலாநிதி ஜயசிங்க தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.