யாழிலும் சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பிடும் பணி
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி வியாழக்கிழமை நாடு பூராகவும் தெரிவு செய்யப்பட்ட நிலையங்களில் நடைபெறவுள்ளது.
முதலாம் கட்ட விடைத்தாள் மதிப்பிடும் பணி டிசெம்பர் மாதம் 30ம் திகதியிலிருந்து ஜனவரி 8ந் திகதி வரையும், இரண்டாம்கட்ட விடைத்தாள் மதிப்பிடும் பணி ஜனவரி இருபதாம் திகதி ஆரம்பமாகி 29ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
விடைத்தாள் மதிப்பிடும் பணி நாடு பூராகவும் 51 நிலையங்களில் இடம்பெறவுள்ளன. யாழ். மாவட்டத்தில் இப்பணி யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பெண்கள் பாடசாலை, யாழ். மத்திய கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் நடைபெறவுள்ளது.
Post a Comment