Header Ads



யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை நிர்மாணப்பணி விரைவில் ஆரம்பம்


யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை யொன்றை அமைப்பதற்கான நிர்மாணப் பணிகள் அடுத்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்.சில்வா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மேலதிக வசதிகளை ஏற்படுத்துமுகமாகவே இந்தப் புதிய சிறைச்சாலை நிர்மாணிக்கப்படுவதாக அவர் கூறினார்.

இதற்கான நிதியை அரசாங்கம் ஒதுக்கி உள்ளதாகவும், நிர்மாணப் பணிகள் வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்படு மென்றும் ஆணையாளர் நாயகம் கூறினார்.

யாழ்ப்பாண கோட்டையில் இருந்த சிறைச்சாலை 1985 ஆம் ஆண்டு சேதமானது. பின்னர் 1996 இல் இரண்டு தனியார் வீடுகளில் தொழிற்பட்டது. தற்போது சொந்தக் காணியில் சிறைச்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளதென்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.யாழ்ப்பா ணத்தில் சுமார் 225 கைதிகள் சிறைவைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.