Header Ads



ஜப்பான் நாட்டு எலி பாட்டு பாடுமாம் !


ஜப்பானில் உள்ள ஒசாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எலிகளிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் திட்டத்தில் ஈடுபட்டனர். அதற்காக அவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட எலியை உருவாக்கினார்கள். 

அந்த எலியில் “டி.என்.ஏ.” மூலக்கூறு மாற்றப்பட்டிருந்தது. இந்த எலியில் சில பரிணாம மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டன. பின்னர் இந்த எலியில் கலப்பின சேர்க்கை நடத்தப்பட்டது. இதன் மூலம் தோன்றிய எலிகளை விஞ்ஞானிகள் பரிசோதித்தனர். 

அவற்றில் ஒரு எலி பறவைகளின் சத்தமான “கிரீச்” என்று ஒலி எழுப்பியது. அது பாடல் போன்று கேட்டது. இந்த எலி மூலம் தோன்றும் மற்ற எலிகளும் இது போன்று பாடும் தன்மையுடன் கூடியதாக பிறக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. 

இந்த தகவலை ஜப்பான் விஞ்ஞானி அரிகுனி உசிமுரா தெரிவித்துள்ளார். மேலும் மனிதனின் குரலில் எலியை பாட வைப்பது எப்படி? என ஆராய்ச்சி செய்து வருவதாகவும் அவர் கூறினார்

No comments

Powered by Blogger.