கொள்ளைச் சம்பவங்களை தடுக்க பொலிஸார் - இராணுவம் ரோந்து
யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரும், இராணுவத்தின ரும் இணைந்து கூட்டு ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன் பொதுமக்களும் இது குறித்து விழிப்பாக இருந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் அதிகரித்துவரும் தொடர் கொள்ளைச் சம்பவங்களை தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.
இதேவேளை யாழ். மாவட்டத்தில் வலிகாமம் பகுதியில் மானிப்பாய், சுன்னாகம் பொலிஸ் பிரிவில் துப்பாக்கி, கத்தி, வாள் போன்ற ஆயுதங்கள் முனையில் இரவு, பகல் என்று பாராமல் பல இடங்களில் இடம்பெற்று வரும் குற்றச் சம்பவங்களால் இப்பகுதி மக்கள் இரவில் நிம்மதியாகத் தூங்க முடியாமலும், பகலில் குறிப்பாகப் பெண்கள் தயக்கமின்றி நடமாட முடியாமலும் திண்டாடுகின்றார்கள்.
இரு மாதங்களுக்குள் ஏழு இடங்களில் இடம்பெற்ற வழிப்பறி கொள்ளைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளன.

Post a Comment