மதக்கலவரத்தை தோற்றுவிப்பதற்கு ஹெல உறுமய வித்திடுகின்றது

தேசிய இனப்பிரச்சினையிலும் அதனால் ஏற்பட்ட அழிவுகள் துயரங்களில் இருந்தும் மீண்டுவர முடியாத நிலைமை காணப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் ஜாதிக ஹெல உறுமயவின் கருத்துக்கள் இந்நாட்டில் மதக் கலவரத்தை தோற்றுவிப்பதற்கும் மீண்டும் இந்த நாடு பற்றியெரிவதற்குமே வழிவகுத்துள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
சிங்களவர்கள் வடக்கில் மீள்குடியேற்றப்படுவது தொடர்பில் அரசாங்கத்திடமும் ஜனாதிபதியிடமுமே கேள்வியெழுப்ப வேண்டுமே தவிர கர்தினால் மெல்கம் ரஞ்சித்திடம் அல்ல. ஹெல உறுமயவின் இனவாதத் தீயினுள் கத்தோலிக்க திருச்சபையையும் இணைத்து களங்கத்தை ஏற்படுத்தும் இந்த பாரதூரமான சிந்தனையை, எதிர்க்கட்சி என்ற வகையிலும் சகலருக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினைக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையிலும் மிக வன்மையாகக் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
வடக்கில் சிங்களவர்கள் மீள்குடியேற்றப்படுவது தொடர்பில் கத்தோலிக்கத் திருச்சபையின் நிலைப்பாட்டினை கர்தினால் மெல்கம் ரஞ்சித் வெளிப்படுத்தவேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் கருத்து தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் மனித உரிமைகளுக்கான பிரதிச் செயலாளரும் எம்.பி. யுமான டாக்டர் ஜெயலத் ஜயவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்
Post a Comment