நவாலியில் வசமாக மாட்டிய திருடன்
நவாலி வழுக்கையாறு வயல் வெளியில் பெண்ணொருவரிடம் நகைகளைத் திருட முற்பட்ட ஐந்து பேர் கொண்ட கொள்ளைக் கோஷ்டியில் ஒருவரைப் படையினர் பிடித்து உள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
நவாலி, வழுக்கையாறு இந்து மயானத்திலுள்ள மடத்தினுள் நேற்று மாலை 5 பேர் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள வயலுக்குச் சென்று கொண்டிருந்த பெண்ணை பின் தொடர்ந்த மேற்குறித்த 5 பேரும் நகைகளை அபகரிக்க முற்பட்டுள்ளனர்.
குறித்த பெண்ணை வயலுக்குள் தள்ளி வீழ்த்தியதை அவதானித்த அப்பகுதியிலுள்ள படையினர் மேற்கொண்ட முயற்சியில் திருடன் ஒருவன் பிடிபட்டான். ஏனைய நால்வரும் தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு படையினரால் பிடிக்கப்பட்ட திருடன் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். அத்துடன் திருடர்கள் பயன்படுத்திய ஐந்து சைக்கிள்களும் வழுக்கையாறு இந்து மயானத்திலிருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டன.
Post a Comment