யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் பாராளுமன்றத்தில் பிரேரணை

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்று வரும் கொலை, கொள்ளைகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கவனயீர்ப்பு பிரேரணையொன்றைக் கொண்டு வரவுள்ளது.2011 ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகும் தினத்திலேயே இந்தக் கவனயீர்ப்புப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி.கே.சுரேஷ் பிரேமச்சந்திரன் இது பற்றித் தெரிவிக்கையில்;
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் கொலை, கொள்ளைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஜனவரி 4 ஆம் திகதி காலை பாராளுமன்றத்தில் கவனயீர்ப்புப் பிரேரணையொன்று கொண்டு வரப்படவுள்ளது' என்று கூறினார்.
இதை முதலாவது நடவடிக்கையாக குறிப்பிட்ட சுரேஷ் பிரேமச்சந்திரன், அடுத்த நடவடிக்கையாக சிங்கள மொழியில் மட்டுமே இலங்கை தேசியகீதம் பாட வேண்டும் என்ற விவகாரம் பற்றியும் பிரேணணையொன்றைப் பாராளுமன்றத்துக்குக் கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இனிவரும் காலங்களில் அரச அல்லது உத்தியோகப்பூர்வ நிகழ்வுகளில் இலங்கை தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடவேண்டுமென டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக வாராந்த ஆங்கில பத்திரிகையொன்றில் வெளியான செய்தியை அடுத்தே தேசியகீதம் பற்றிய சர்ச்சை கிளம்பியமை இங்கு குறிப்பிட்டுள்ளது.
Post a Comment