விக்கிலீக்ஸ் இரகசிய ஆவணங்கள் சி.ஐ.ஏ. யின் விசாரணை
"விக்கிலீக்ஸ்' சமீபத்தில் வெளியிட்ட ரகசிய ஆவணங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பை அறிய, சிறப்புப் படை ஒன்றை அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ., அமைத்துள்ளது.
"விக்கிலீக்ஸ்' வெளியிட்ட அமெரிக்க வெளியுறவு ரகசிய ஆவணங்களால், அமெரிக்க உளவுத் துறையின் வெளியுறவுகள் மற்றும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று கண்டறிய, "விக்கிலீக்ஸ் சிறப்புப்படை' என்ற பெயருடன் ஒரு சிறப்புப் படையை சி.ஐ.ஏ., அமைத்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவுலி,
"பிற நாடுகளுடனான அமெரிக்காவின் உறவுகள், பரஸ்பர நன்மை கருதியவை. அதனால் விக்கிலீக்ஸ் ரகசிய ஆவணங்களால் அந்த உறவுகளை மாற்றியமைக்க முடியாது' என்று கூறியுள்ளார்.

Post a Comment