கணிதப் பாடத்தில் பூச்சியமா..? பரவாயில்லை ஏ.எல் செய்யலாம்
கல்விப் பொதுத்தராதர உயர் தரத்தை பயில்வதற்காக கணித பாடத்தில் சித்தியெய்தியிருக்க வேண்டிய அவசியமில்லை என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை, இசைத்துறை போன்ற கற்கை நெறிகளைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு தற்போதைய நடைமுறை தடையாக அமைந்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
உயர் தரக் கல்வியை தொடர வேண்டுமாயின் சாதாரண தரத்தில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு ஜோன் டி சில்வா அரங்கில் நடைபெற்ற சிறுவர் நாடக விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் கல்வியைத் தொடருவதற்கு இவை செயற்கையான தடையாக அமையப் பெற்றுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வித்துறையை சார்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கணித பாடத்தில் சித்தி குறித்த தற்போதைய நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment